NEW UPDATE REGARDING 2023 AL Results
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்
(UPDATED ON 31.08.2023)
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள் பெறுபேறுகளை திருத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகள்
இந்த பரீட்சையில், 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைகளில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சை முடிவுகள் பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் வாரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை, உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில், பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment