Welfare benefits for SRILANKAN Families-ELIGIBLE LIST & RE APPEAL FORM RELEASED 2023
வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்! மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த இலங்கை அரசாங்கம்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச வங்கிகள் திறந்திருக்கும்..
அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அஸ்வெசும குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு வங்கி கணக்கிற்கு கிடைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தால் கீழே உள்ள பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என உறுதி படுத்துங்கள்
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.
No comments:
Post a Comment