Registration for CEB e-Billing Service
Monthly electricity bills via email – Ceylon Electricity Board
மின்னஞ்சல் மூலம் மின் கட்டண பட்டியல் – இலங்கை மின்சார சபை
நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேப்பர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார கட்டண பட்டியலை பேப்பரில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதால் அனைவரையும் ஈமெயில் மூலமாக மாதாந்த மின்சார கட்டண பட்டியலை பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யுமாறு மின்சார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது..
இரு முறைகளில் உங்களால் மின்சார கட்டண பட்டியலை ஈமெயிலில் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள முடியும்..
முறை 1 – sms ஊடாக பதிவு செய்தல்.
EBILL” <space> Account number <space> Email address என / என்பவற்றை டைப் செய்து 1987 க்கு அனுப்புமாறு நுகர்வோர்களுக்கு CEB அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பு – உங்கள் மின்சார கட்டண பட்டியலில் உங்கள் account இலக்கத்தை பார்க்க முடியும்.
முறை 2 – இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல்..
ebill.ceb.lk என்ற லிங்கை கிளிக் செய்து வலை தளத்தில் நுழைந்த பின்னர் ஒரு திரை தோன்றும். அதில் முதலாவதாக உங்கள் electicity கட்டண பட்டியல் இலக்கம் கொடுத்து otp பெற்று கொள்ளுங்கள்.. email முகவரியை கொடுத்து பதிவு செய்யுங்கள்..அதன் பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு மாதம் தோறும் மின்சார கட்டண பட்டியல் வந்து சேரும்
No comments:
Post a Comment